தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும் தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண் பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய் பாவிஎன விட்டனையோ பன்னா ளாக ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந் திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன் சீராருந் தணிகைவரை அமுதே ஆதி தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம் தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம் வாரா வரவாகி வந்தபொற் பாதம் வஞ்ச மனத்தில் வசியாத பாதம் ஆடிய