தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திருக்கூத்தர் தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார் ஒற்றித் தியாகர்அவர் சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் தேடி வரும்அத் தீமதியம் சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே