தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச் சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால் இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும் நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான் ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும் அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே