துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில் தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச் செங்கண் மால்அயன் தேடியும் காணாச் செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே இன்ப மேஇமை யான்மகட் கரசே திங்கள் தங்கிய சடையுடை மருந்தே திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே