துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன் அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப் படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால் குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே