துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி துணைவநின் துணையடி போற்றி புணைஎன இடரின் கடலினின் றேற்றும் புனிதநின் பொன்னடி போற்றி இணையில்பே ரின்ப அமுதருள் கருணை இறைவநின் இணையடி போற்றி கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக் கண்ணநின் கழலடி போற்றி