துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும்என் தன்னை இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச் செயல் நின்அருள் இயல்பே அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே