துதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு நதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார் மதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே