துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும் பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார் நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ