Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2538
துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே
பாடல் எண் :4733
துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர் 

சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள் 
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார் 

விழித்திருந் திடவும்நோ வாமே 
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க 

மன்றிலே வயங்கிய தலைமைப் 
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.