துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் சோதியுட் சோதியே எனது மதிவளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெருங்குண மலையே கதிதரு துரியத் தனிவெளி நடுவே கலந்தர சாள்கின்ற களிப்பே பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே