துனித்தவெம் மடவார் பகல்வந்த போது துறவியின் கடுகடுத் திருந்தேன் தனித்திர வதிலே வந்தபோ தோடித் தழுவினேன் தடமுலை விழைந்தேன் இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே இடர்ப்பட்ட நாயென இளைத்தேன் நனித்தவ றுடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே