துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும் கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே