துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய் வன்ப தாகிய நீயும்என் னுடனே வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன் ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே