துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ
துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன் அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப் பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து