துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும் அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே