துன்புறேல் மகனே தூங்கலை எனஎன் சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை அன்புளே கலந்த தந்தையை என்றன் ஆவியைப் பாவியேன் உளத்தை இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி இனிதமர்ந் தருளிய இறையை வன்பிலாக் கருணை மாநிதி எனும்என் வள்ளலைக் கண்டுகொண் டேனே