துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர் பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர் என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே