துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே இப்பாடு படஎனக்கு முடியாது துரையே இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய் தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல் தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே