தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே சோர்ந்தழு திளைத்துமென் குரலும் கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள் காதுறக் கேட்டிருக் கின்றாள் செம்மியே மடவார் கொம்மியே பாடிச் சிரித்திருக் கின்றனர் அந்தோ இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும்எந் தாயே