துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன் கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால் குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும் மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே