துரிய வெளிக்கே உரியபொற் பாதம் சுகமய மாகிய சுந்தரப் பாதம் பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம் பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம் ஆடிய
துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின் உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்