துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன் கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே