துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப் பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப் பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப் பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே