துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத் தொட்டிலே பலஇருந் திடவும் திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி சிறியனைக் கிடத்தினள் எந்தாய் பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற பிள்ளைநான் எனக்கிது பெறுமோ கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக் கண்டிடில் சகிக்குமோ நினக்கே