துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே சுயம்பிர காசமே அமுதில் கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக் கடவுளே கண்ணுதற் கரும்பே குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடுந்துய ரால்அலைந் தையா முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை முடன்என் றிகழ்வது முறையோ