துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித் துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன் புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய் மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக் கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக் கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே