துள்ளிவாய் மடுக்கும் காணையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன் உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள் நகர் உகுப்பார் அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே