தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள் துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே தாக்கு()பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால் தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய் ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன் இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ் பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே