தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே தூயநீர் ஆடுக துணிந்தே பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை எழில்உற மணம்புரி விப்பாம் ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார் இயன்மணி மன்றிறை யவரே