தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும் தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே