தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன் தோகையர் மயக்கிடை அழுந்தி ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள மாமணிக் குன்றமே மருந்தே ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி யூர்வரும் என்னுடை உயிரே