தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன் சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன் ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன் இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால் வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன் ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன் உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே