தெண்ணீர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக் கண்ணீர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண் புண்ணீர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண் மண்ணீர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே