தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே