தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள் சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன் தான்நினைத்த போதெனையே நான்நினைத்த திலையேல் ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார் உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில் உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே