தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப் பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல் தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ