தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ