தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே விரிந்தமகா சுத்தபர லோகஅண்ட முழுதும் மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே