தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார் பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ துயெஅருள் புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே