தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில் பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும் பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே