தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த் தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே