தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந் தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே