தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச் செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன் அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான் அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன் மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன் மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில் இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன் இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ