தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி
தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே