தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றான் சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார் மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன் இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங் கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ