தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள் ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான் வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே