தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன் குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே