தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன் செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர் களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக் கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும் சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத் தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன் அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ