தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே இடையிடர்ப் பசியசெம் பொன்னே செவ்வண மணியே திகழ்குணக் கடலே திருவொற்றி யூர்ச்செழுந் தேனே